ஸ்மித் விமான நிலையத்தில் குற்றவாளி போல் நடத்தப்பட்டது வேதனையளிக்கிறது: கெவின் பீட்டர்சன்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்மித் குற்றவாளியைப் போல் இழுத்து செல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கின்றது என முன்னாள் இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்ட் சிக்கினார். பேன்கிராப்டின் இந்த செயலுக்கு பின்னணியில் டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஸ்மித், வார்னர் ஆகியோர் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பேன்கிராப்டுக்கு ஒன்பது மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் செயலுக்கு குற்றம் சாட்டப்பட்ட மூன்று வீரர்களுமே வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தென் ஆப்ரிக்கா தலைநகர் ஜோகனஸ்பெர்க் விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், விமான நிலைய போலீஸ் அதிகாரிகளால் குற்றவாளியை அழைத்து செல்வது போல் அழைத்து செல்லபட்டார். இந்த சம்பவத்துக்கு கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் குற்றத்தை உணர்ந்த பிறகும் குற்றவாளிகள் போல ஸ்டீவ் ஸ்மித் நடத்தப்பட்டது வேதனை அளிப்பதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

හිත හොද රොහිත් ලස්සනට සිංහල කතා කරන හැටි බලන්න බංගලියො වගේ නෙවෙයි නියම මහත්තයෙක් නේද video